/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
/
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 25, 2025 01:16 AM

மதுராந்தகம்,:படாளம் பகுதியில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
மதுராந்தகம் அருகே படாளம் -- பூதுார் மாநில நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இவை, மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில், மேய்ச்சலுக்காக கும்பலாக வருகின்றன. அப்போது, இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன.
இதில் மனித உயிர் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பதும் தொடர்கிறது.
சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இப்பகுதியில் மாடுகளை கட்டுப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், இப்பகுதியில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, படாளம் ஊராட்சி நிர்வாகத்தினர், சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.