/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் ரயில்வே கேட் மூடல்
/
அச்சிறுபாக்கம் ரயில்வே கேட் மூடல்
ADDED : ஜன 20, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் - -சூனாம்பேடு நெடுஞ்சாலையில், வெங்கடேசபுரம் பகுதியில் செங்கல்பட்டு- - விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் கேட் எண்.75 உள்ளது.
அச்சிறுபாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் வரும் 23 வரை, இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தும்படி, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், தொழுப்பேடு மற்றும் சோத்துப்பாக்கம், மதுராந்தகம் வழியாக சூணாம்பேடு, செய்யூர் செல்லலாம்.