/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை மேம்பாட்டு திட்டம் வல்லுனர் தேர்வுக்கு நடவடிக்கை
/
கடற்கரை மேம்பாட்டு திட்டம் வல்லுனர் தேர்வுக்கு நடவடிக்கை
கடற்கரை மேம்பாட்டு திட்டம் வல்லுனர் தேர்வுக்கு நடவடிக்கை
கடற்கரை மேம்பாட்டு திட்டம் வல்லுனர் தேர்வுக்கு நடவடிக்கை
ADDED : செப் 25, 2024 07:01 PM
சென்னை:சென்னையில் கடற்கரை மேம்பாட்டு திட்டத்துக்கு, ஒப்பந்த முறையில் வல்லுனர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சென்னையில், எண்ணுார் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதிகளை சுற்றுலா, பொழுதுபோக்கு அடிப்படையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம், 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து சி.எம்.டி.ஏ., இத்திட்டத்தை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை கடற்கரை மேம்பாட்டு திட்டத்துக்காக தனி நிறுவனத்தை சி.எம்.டி.ஏ., உருவாக்கியது.
இந்த புதிய நிறுவனத்தில், பல்வேறு நிலைகளில் சி.எம்.டி.ஏ., மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் இருக்கும் வகையில், பதவியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக, தொழில்முறை வல்லுனர் இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தலைமை நிதி ஆலோசகர், தலைமை செயல்பாட்டு அலுவலர், நிறுவன செயலர், நகரமைப்பு வல்லுனர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், சமூகவியலாளர், கட்டட அமைப்பியல் பொறியாளர், எம்.இ.பி., பொறியாளர் என ஏழு வகை இடங்களுக்கு வல்லுனர்களை தேடும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
'இது தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர், www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்' என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

