/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
/
திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : நவ 30, 2024 01:48 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், தண்டலம், ஆலத்துார் உள்ளிட்ட 50 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், பல்வேறு திட்டங்களின்கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இதில், தண்டலம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் உள்ளூர் திட்ட குழும நிதியின் கீழ், 2 கோடி ரூபாய் மதிப்பில், காமராஜர் தெரு, ஏரிக்கரை சாலை, பாரிவள்ளல் தெருக்களில், சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மற்ற பகுதிகளில் ரேஷன் கடை, நெற்களம் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணிகளை, மாவட்ட கூடுதல் கலெக்டர் அனாமிகா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், தண்டலம் காமராஜர் தெருவில், 6.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை ஆய்வு செய்தார். சாலையின் நீளம், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்யக் கூறி, அவற்றை சரிபார்த்தார்.
அதே போல், ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய ஆலத்துார் கிராமத்தில், தொகுப்பு வீடு புனரமைப்பு பணிகள் மற்றும் வெங்கலேரி கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய சாலை, ரேஷன் கடை, புதிதாக அமைக்க உள்ள சாலை, தொகுப்பு வீடு புனரமைப்பு உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.