/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போட் ஹவுஸ் ஓய்வு கூடாரத்தில் கூடுதல் இருக்கை வசதி அவசியம்
/
போட் ஹவுஸ் ஓய்வு கூடாரத்தில் கூடுதல் இருக்கை வசதி அவசியம்
போட் ஹவுஸ் ஓய்வு கூடாரத்தில் கூடுதல் இருக்கை வசதி அவசியம்
போட் ஹவுஸ் ஓய்வு கூடாரத்தில் கூடுதல் இருக்கை வசதி அவசியம்
ADDED : ஜன 02, 2024 04:20 AM
செய்யூர் : செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப்பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்' உள்ளது.
இங்கு, விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வருகை தந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்தும், கடற்கரை பகுதியில் ஓய்வெடுத்தும் பொழுதுபோக்குவது வழக்கம்.
சுற்றுலாப் பயணியர் ஓய்வெடுப்பதற்காக, கடற்கரை ஓரத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு இயற்கை சார்ந்த பொருட்களால் ஓய்வு கூடாரங்கள் அமைக்கப்பட்டன.
இது, சுற்றுலா பயணியர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்லும் ஓய்வு கூடாரங்களில், 30 பேர் மட்டுமே அமர முடியும்.
ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணியர், அமர இருக்கைகள் இன்றி, ஏமாற்றத்துடன் கடற்கரையில் இருந்து உடனே திரும்பி விடுகின்றனர்.
புத்தாண்டு, பொங்கல் என, இனிவரும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வர உள்ளதால், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

