ADDED : செப் 09, 2026 07:03 PM
திருக்கழுக்குன்றம், செப். 10–
நடுவக்கரை ஊராட்சியில் கூடுதல் குடிநீர் தொட்டி இல்லாததால், கால்நடைகள் மேய்ச்சலுக்காக, வெற்றிடங்களை தேடி அலையும் அவலம் நீடிக்கிறது.
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நடுவக்கரை ஊராட்சியில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஐந்து முதல் நான்கு பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். மேலும்,
எருமை மாட்டின் பாலின் விலை அதிகம் என்பதால், நடுவக்கரை போன்ற பகுதிகளில் எருமை மாடுகளையும், ஆடுகளையும் அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழியில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் தாகம் தீர்த்து வருகின்றன.
மேலும், வரும் மழைகாலமான, கார்த்திகை மாதத்தில் விவசாயிகள், முதல் சாகுபடியான சம்பா பருவத்திற்கு தயாரகி வருகின்றனர். இதனால், பெரும்பான்மையான பகுதிகள் விளை நிலங்களாக இருப்பதால், கால்நடைகள் மேய்ச்சலுக்காக, வெற்றிடங்களை தேடி நீண்ட தொலை துாரம் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் கூடுதல் கால்நடை தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
