/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் இன்று கும்பாபிஷேக விழா
/
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் இன்று கும்பாபிஷேக விழா
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் இன்று கும்பாபிஷேக விழா
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் இன்று கும்பாபிஷேக விழா
ADDED : அக் 30, 2025 10:29 PM
செங்கல்பட்டு:  செங்கல்பட்டில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா, 16 ஆண்டுகளுக்குப் பின், இன்று நடக்கிறது.
செங்கல்பட்டு சின்னமேலமையூரில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவை பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
அதன் பின், கடந்த 16 ஆண்டுகளுக்குப் பின், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு கும்பாபிஷேக விழா நடத்த, நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
திருப்பணிகள் துவங்கி, கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றன.
அதன் பின், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி, குரு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, சக்தி கொடி ஏற்றி வைத்தும், முதல் கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நேற்று நடைபெற்றது. இந்த வேள்வி பூஜையில், செவ்வாடை பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மூன்றாம் கால வேள்வி பூஜையுடன், கும்பாபிஷேக விழா, இன்று காலை 12:05 மணி முதல் 1:00 மணி வரை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், இன்று துவக்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகளை, செங்கல்பட்டு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விழாவில், செங்கல்பட்டு நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

