/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
/
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
கம்பங்களில் விளம்பர தட்டிகள் மின்வாரிய ஊழியர்கள் அவதி
ADDED : மார் 14, 2024 10:33 PM

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகளின் ஓரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய சாலை மற்றும் தெருக்களில் உள்ள மின் கம்பங்களில், தனியார் கடைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தட்டிகள், தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்து உள்ளதால், பெரும்பாலான மின்கம்பங்களில், அது குறித்தான விளம்பர தட்டிகள் பெருமளவில் தொங்க விடப்பட்டு உள்ளன. பல இடங்களில் சரியாக கட்டப்படாததால், அவை அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. அவை அதிக அளவில் காற்று வீசும் போது, வாகன ஓட்டிகள் மீது அறுந்து விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது:
மின் இணைப்புகள் உள்ள கம்பங்களில் விளம்பர பலகைகள் கட்டப்படுவதால், இணைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்படும் போது, கம்பங்களில் ஏறி சீரமைக்க மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, இதுபோன்று அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர தட்டிகளை அகற்றி, அவற்றை வைத்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

