/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., பிரசாரம்
/
தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : அக் 07, 2025 11:41 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே, அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், தி.மு.க.,வுக்கு எதிராக 'உருட்டுகளும் திருட்டுகளும்' மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலர் பக்தவச்சலம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் பங்கேற்றார்.
அப்போது, 'தி.மு.க.,வுக்கு எதிராக உருட்டுகளும் திருட்டுகளும்' மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி, அதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.