/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் சட்டசபை தொகுதியில் குளறுபடி கலெக்டர் விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை
/
தாம்பரம் சட்டசபை தொகுதியில் குளறுபடி கலெக்டர் விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை
தாம்பரம் சட்டசபை தொகுதியில் குளறுபடி கலெக்டர் விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை
தாம்பரம் சட்டசபை தொகுதியில் குளறுபடி கலெக்டர் விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : டிச 10, 2025 08:17 AM
செங்கல்பட்டு: 'தாம்பரம் சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை முறையாக சரிபார்த்து இருந்தால், 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பர்' என, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப்- கலெக்டர் மாலதி ஹெலன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மற்றும் அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக் கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் தி.மு.க., நகர செயலர் குமார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் வேதாசுப்பிரமணி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசியதாவது:
அ.தி.மு.க., மாவட்ட செயலர், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்: தாம்பரம் சட்டசபை தொகுதியில், 115ம் பக்கத்தில், ஒரே முகவரியில் 350 வாக்காளர்களும், 117ம் பக்கத்தில், 60 வாக்காளர்களும் உள்ளனர்.
இதுபற்றி, தேர்தல் அலுவலர்களிடம் தெரிவித்தால், கண்டுகொள்ளவில்லை.
இந்த தொகுதியில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சரியாக வழங்கியிருந்தால், 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பர்.
தொகுதியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதற்கு தீர்வு காண, கலெக்டர் நேரடியாக வர வேண்டும்.
அ.தி.மு.க., வழக் கறிஞர் விநாயகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியை சிறப்பாக செய்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செங்கல்பட்டு சப் - கலெக்டர் மாலதி ெஹலன், கணக்கீட்டு படிவங்களை வீடு வீடாகச் சென்று சரிபார்த்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.

