/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலந்துார் - பல்லாவரம் மினி பஸ் இயக்கம்
/
ஆலந்துார் - பல்லாவரம் மினி பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 16, 2025 09:34 PM
ஆலந்துார்:ஆலந்துார் - -கீழ்க்கட்டளை- - பல்லாவரம் புதிய வழித்தடத்தில், நேற்று முதல் புதிதாக, சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதி பொதுமக்கள் கீழ்க்கட்டளை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். இவர்கள், ஜி.எஸ்.டி., சாலை வழியாக பல்லாவரம் சென்று, உள்பகுதியை அடைகின்றனர்.
எனவே மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை வழியாக பல்லாவரத்திற்கு சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வழித்தடம் 'எஸ்79' எனும் சிற்றுந்து ஆலந்துார், கீழ்க்கட்டளை வழியாக பல்லாவரத்திற்கு, நேற்று முதல் இயக்கப்படுகிறது.
இதன் சேவையை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் துவக்கி வைத்தார்.
புதிய வழித்தட சிற்றுந்து 'எஸ்79' ஆலந்துார் காந்தி மார்க்கெட்டில் புறப்பட்டு, எம்.கே.என்., சாலை, பரங்கிமலை, கருணீகர் தெரு, ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர், சாந்தி நகர், கேசரி நகர், நிலமங்கை நகர், கூட்டுறவு நகர், வாணுவம்பேட்டை, நங்கநல்லுார், மூவரசம்பட்டு, கீழ்க்கட்டளை வழியாக பல்லாவரம் வரை சென்று திரும்புகிறது.