/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய சம்பவம் சிகிச்சை பெற்ற அனைவரும் 'டிஸ்சார்ஜ்'

ADDED : டிச 10, 2024 12:06 AM
பல்லாவரம், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த சம்பவத்தில், குரோம்பேட்டை மருத்துவமனையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும், நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். புதிதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கண்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில், கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதில், 60க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்டவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். உடல்நிலை மோசமடைந்த எட்டு பேர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களும் குணமடைந்து வீடு திரும்பினர்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், டிச., 7ம் தேதி 26 பேர், நேற்று முன்தினம் 12 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடைசியாக சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும் குணமடைந்து, நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால் பாதிக்கப்பட்டதாக, நேற்று யாரும் அனுமதிக்கப்படவில்லை.