/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டூர் ஏரியில் துார்வாரும் மண் மீண்டும் ஏரியிலேயே குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
/
குண்டூர் ஏரியில் துார்வாரும் மண் மீண்டும் ஏரியிலேயே குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
குண்டூர் ஏரியில் துார்வாரும் மண் மீண்டும் ஏரியிலேயே குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
குண்டூர் ஏரியில் துார்வாரும் மண் மீண்டும் ஏரியிலேயே குவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 06, 2025 02:11 AM

செங்கல்பட்டு:குண்டூர் ஏரியில் துார்வரும் மண்ணை மீண்டும் ஏரியில் குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில் குண்டூர் ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் விவசாயத்திற்கு பயன்பட்டது.
தற்போது, குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், நிலத்தடி நீருக்கான நீராதார பகுதியாக விளங்குகிறது. தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக ஏரியில் இருந்து 5 ஏக்கர் நிலம் 1987 ல் வழங்கப்பட்டது.
அப்போது, ஏரி கலங்கலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். உபரிநீர் வெளியேறுவதை தடுக்கக்கடாது உள்ளிட்ட நிபந்தனைகள், பள்ளி நிர்வாகத்திற்கு விதிக்கப்பட்டன.
அதன்பின், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் 2.5 ஏக்கர் இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதனால், தற்போது ஏரியின் பரப்பளவு 29 ஏக்கராக குறைந்துள்ளது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி இருப்பதால், துார்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது. நீர்வளத்துறையின் அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு திட்டமான அம்ரூத் திட்டத்தில், 2022-23ம் ஆண்டு, 2.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், ஏரியை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்துதல், நடைபாதை, மின் விளக்குகள் மற்றும் அலங்கார செடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 2023ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கியது. தற்போது, ஏரிகரை பலப்படுத்தப்பட்டும், நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மட்டும் நடந்துள்ளது. மற்ற பணிகள் நடைபெறாமல் ஆமைவேகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தில், ஏரி துார்வாரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமூக பொறுப்பு நிதி 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஏரி துார்வாரும் பணியை தனியார் நிறுவனம், கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி துவங்கி நடக்கிறது. ஏரியில் துார்வாரும் மண்ணை, ஏரி பகுதியிலேயே மண் திட்டுக்கள் அமைத்துள்ளனர்.
இந்த மண் மீண்டும் ஏரியில் செல்லும் சூழல் உள்ளது. இதனால், ஏரியில் துார்வாரும் மண்ணை வெளியிடத்தில் கொட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், கலெக்டர் சினேகாவிடம், கோரிக்கை வைத்தனர். உடனடியாக நிறைவேற்ற, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.