/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
50 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
50 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 20, 2025 12:49 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் உயர்நிலை பள்ளி நுாற்றாண்டுகளை கடந்த பழமையான பள்ளியாகும்.
இப்பள்ளியில் 1975ம் ஆண்டு, நடிகர் நாசர், ஓவியர் வேதா உள்ளிட்டவர்கள் பி.யு.சி., எனப்படும் 11ம் வகுப்பு படித்தனர். தற்போது இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 1975ல் படித்த படித்த முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று பள்ளியில் சந்திக்கும் நிழச்சியை ஏற்பாடு செய்தனர்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மணிகுண்டு, வேதாசலம் நகர் ஆகிய பகுதியில் உள்ள, பிரைமரி பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆசிரியர்கள் பங்கேற்று, முன்னாள் மாணவர்களை பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாங்கள் கல்வி பயிற்று வித்த விதங்கள் குறித்து நினைவு கூர்ந்து பகிர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் நடிகர் நாசர், ஓவியர் வேதா உள்ளிட்ட 70 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் நினைவாக, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பள்ளிக்கு அமைத்து கொடுத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அரிமா சங்க கவர்னரும், முன்னாள் மாணவருமான முருகப்பா மற்றும் துரைராஜ், ஜோதிராமலிங்கம், ஜோதி, ராஜேந்திரன், மணி ஆகியோர் செய்திருந்தனர்.