/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துாரில் அம்பேத்கர் பிறந்தநாள்
/
காட்டாங்கொளத்துாரில் அம்பேத்கர் பிறந்தநாள்
ADDED : ஏப் 14, 2025 11:53 PM

மறைமலைநகர், மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் விழா நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் விழா நடைபெற்றது. அம்பேத்கர் உருவப் படத்திற்கு, அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பெண்களுக்கு தையல் இயந்திரம், வங்கிக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்போரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருப்போரூர், ஏப்.15-
திருப்போரூர் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் வடக்கு ஒன்றிய செயலர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள் செல்வகுமார், விடுதலை நெஞ்சன், சிறுதாவூர் ஊராட்சி தலைவர் வேதா அருள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பாரதி, நிர்வாகி சமரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திதனர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் தலைமயைில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில் வடக்கு ஒன்றிய செயலர் குமரவேல் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். பா.ம.க., சார்பில் மாவட்ட செயலர் ஏழுமலை தலைமயைில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். புரட்சி பாரதம் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலர் சிவலிங்கம், புதிய புரட்சி கழகம் தலைவர் சங்கர் தலைமையில், கோவிந்தராஜ், லோகு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பளார் லோகு தலைமையில் மாலை அணிவித்தனர்.
இதனால் திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்து சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்