/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிக்கடி மின் தடை பிரச்னை ஆமூர் கிராமத்தினர் அவதி
/
அடிக்கடி மின் தடை பிரச்னை ஆமூர் கிராமத்தினர் அவதி
ADDED : ஜூன் 04, 2025 10:06 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், ஆமூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், பகுதிவாசிகள் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இரவு, பகல் பாராமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கோடைக்காலம் என்பதால், வீட்டிற்குள் துாங்க முடியாமல், இரவில் முதியவர்கள், குழந்தைகள் வேதனைப்படுகின்றனர்.
மின்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், தகுந்த பதில் இல்லை. கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல துவங்கி உள்ளனர்.
தற்போது அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.