/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து போதை இளைஞர் பலி
ADDED : மார் 05, 2024 03:47 AM
ஆவடி : ஆவடி, கோவில்பதாகை மசூதி தெருவிலுள்ள பயன்படுத்தப்படாத பொது கிணற்றில் இருந்து, நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.
சந்தேகத்தின்படி, பகுதிவாசிகள் அங்கு சென்று பார்த்த போது, ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஆவடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் அது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, 35, என தெரிந்தது.
திருமணமாகாத இவர், சிமென்ட் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான இவர், போதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

