/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி
/
துாய்மை பணியில் களமிறங்கிய அன்புமணி
ADDED : மே 12, 2025 11:57 PM

மாமல்லபுரம், வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில், நேற்று நடந்தது.
இந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, மாநாடு நடந்த பகுதியில், குப்பை, காலி குடிநீர் பாட்டில் உள்ளிட்ட குப்பை குவிந்திருந்தது.
இதையறிந்த பா.ம.க., தலைவர் அன்புமணி, மாநாட்டு திடலில் குப்பை சேகரித்து அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டார். அதன் பின், கட்சி நிர்வாகிகளும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.