ADDED : பிப் 06, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள், நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், வருவாய்த்துறையில் கிராம உதவியாளர்களுக்கு உள்ளது போல், சிறப்பு பென்ஷன் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, மூன்றாவது நாளாக போராட்டம் நடந்தது.
அங்கன்வாடி பணியாளர்கள், 340 பேர் பங்கேற்றனர். இவர்களை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னர் விடுவித்தனர்.
