ADDED : டிச 19, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பக்த ஆஞ்சநேயர் ஊஞ்சல் உத்சவ சேவையாற்றினார்.
மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தி உத்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் ஊஞ்சல் உத்சவ சேவையாற்றி, தீபாராதனை ஏற்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்றும், சுவாமி ஊஞ்சல் உத்சவ சேவையாற்றினார்.
இன்று மாலை, 4:30 மணியளவில், மாடவீதிகளில் உலா சென்று, கருக்காத்தம்மன் கோவிலுக்கும் செல்கிறார்.

