/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் முருகநாதீஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் அமைக்க அறிவிப்பு

ADDED : ஏப் 17, 2025 10:05 PM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டம், மாம்பாக்கம் கிராமத்தில், தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில் முதலாம் ராஜராஜசோழர் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கடந்த 2022 ஆண்டு பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் துவங்கின. பின், மூலவர் விமானம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. பின். 2023 செப்.5 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக ராஜகோபுரம் வேண்டி பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள் கோரிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சட்டசபையில் அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் மாம்பாக்கம் முருகநாதீஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
இதனால் பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள், சிவனடியார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.