/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஆர்.எம்., பொது பள்ளியில் ஆண்டு விழா
/
எஸ்.ஆர்.எம்., பொது பள்ளியில் ஆண்டு விழா
ADDED : செப் 30, 2024 04:53 AM
கூடுவாஞ்சேரி : நந்திவரம் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், எஸ்.ஆர்.எம்., பொதுப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், பள்ளி மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். இணைவேந்தர் சத்யநாராயணன் முன்னிலை வகித்தார்.
லைவ் லைப் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கண்ணன் கிரீஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்று, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
இதில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.