/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மற்றொரு நகராட்சி திருப்போரூரை தரம் உயர்த்த முடிவு
/
செங்கையில் மற்றொரு நகராட்சி திருப்போரூரை தரம் உயர்த்த முடிவு
செங்கையில் மற்றொரு நகராட்சி திருப்போரூரை தரம் உயர்த்த முடிவு
செங்கையில் மற்றொரு நகராட்சி திருப்போரூரை தரம் உயர்த்த முடிவு
ADDED : அக் 23, 2024 01:45 AM
திருப்போரூர் பேரூராட்சியுடன், சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை பரிசீலித்து வருகிறது.
சென்னை அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பகுதியாக, திருப்போரூர் பேரூராட்சிப் பகுதி விளங்குகிறது. தாலுகா, வட்டார வளர்ச்சி தலைமையிடமாக உள்ளது.
சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவையும், இங்கு செயல்படுகின்றன. திருப்போரூர் சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும் அமைந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், பிரசித்திபெற்ற கந்தசாமி கோவில் அமைந்து, முக்கிய முருகபெருமான் வழிபாட்டு ஸ்தலமாக புகழ்பெற்றது. கோவிலில் தரிசிக்க பக்தர்கள் திரளும் சூழலில், ஆன்மிக ஸ்தலமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அதன் அடிப்படையில், பேரூராட்சியின் வசிப்பிட பகுதிகள் விரிவடைகின்றன. சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகள் வளர்ச்சியடைந்துள்ளன.
உள்ளாட்சி நிர்வாக அமைப்பில், சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியாக, திருப்போரூர் உள்ளது. இங்கு, 15 வார்டு பகுதிகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை, 14,000 பேர். தற்போது சில ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளனர்.
இப்பகுதியின் வளர்ச்சி கருதி, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை முடிவெடுத்துள்ளது. பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய நகராட்சிப் பகுதியாக தோற்றுவிக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பட்டியலில், திருப்போரூர் இடம்பெற்று உள்ளது.
திருப்போரூரை சுற்றியுள்ள கேளம்பாக்கம், புதுப்பாக்கம், தையூர், நாவலுார், சிறுசேரி, தாழம்பூர், படூர், ஆலத்துார், தண்டலம், பையனுார் ஆகிய ஊராட்சிப் பகுதிகளை, திருப்போரூடன் இணைத்து, திருப்போரூர் நகராட்சி உருவாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
புதிய நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை, முந்தைய கணக்கெடுப்பின்படி, 75,000 பேருக்கு மேல் உயரும் என, பேரூராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -