ADDED : ஜன 18, 2026 05:49 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த மற்றொரு மாணவர் உடலும் மீட்கப்பட்டது.
சென்னை, மேற்கு கே.கே.நகரை சேர்ந்த, மணி மகன் ஜெகந்நாதன், 18; கிண்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் அருணாச்சலம், 18; மதுரவாயல், தனியார் பல்கலை மாணவர். இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரத்திற்கு வரும் வழியில், சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தனர்.
அவர்கள் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஜெகந்நாதன் உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது. நீரில் மூழ்கிய அருணாச்சலத்தை, மாமல்லபுரம் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை 11:30 மணியளவில் அவரது உடலும் கரை ஒதுங்கியது.
மாமல்லபுரம் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
