/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அருகே ஒழலுாரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
/
செங்கை அருகே ஒழலுாரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 03, 2025 01:45 AM

செங்கல்பட்டு:ஒழலுாரில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடந்தது.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, 'கண்காணிப்பு நம் அனைவரது கூட்டுப் பொறுப்பு' என்ற கருப்பொருளுடன், கடந்த அக்., 27ம் தேதி முதல், நேற்று வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் சென்னை மண்டல அலுவலகம் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
இதில், காப்பீட்டு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு குறித்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டன.
தலைமை அலுவலகம் ஊழல் தடுப்பு துறை முதன்மை மேலாளர் பாஸ்கர், மண்டல மேலாளர்கள் பேபி, சதா, சந்திரா, சீனிவாசன், ஊழல் தடுப்பு மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பேசினர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை, செங்கல்பட்டு கோட்ட அலுவலகத்தினர் செய்திருந்தனர்.

