/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'அப்ரண்டிஸ்' பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
'அப்ரண்டிஸ்' பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 28, 2025 08:47 PM
கல்பாக்கம்:சென்னை அணுமின் நிலையத்தில், 'அப்ரண்டிஸ்' பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அணுமின் கழகத்தின் கீழ் கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது.
இதில் தேசிய அப்ரண்டிஸ்ஷிப் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், ஐ.டி.ஐ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் டிப்ளமோ, பொறியியல் அல்லாத பட்டதாரி ஆகியோருக்கு, 'அப்ரண்டிஸ்' எனப்படும் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவர்களுக்கு, டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர்
பிட்டர் - 29 பேர், மெஷினிஸ்ட் - 4 பேர், டர்னர் - 1, வெல்டர் - 12 பேர், மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேன் - 1, எலக்ட்ரீஷியன் - 25 பேர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 6 பேர், எலக்ட்ரானிக் மெக்கானிக் - 4 பேர், கார்பென்டர் - 1, பிளம்பர் - 1, மேசன் - 1, சிவில் டிராப்ட்ஸ்மேன் - 3 பேர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் - 4 பேர்.
* டிப்ளமோ படித்தவர்களுக்கு, டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர்:
மெக்கானிக்கல் - 7 பேர், எலக்ட்ரிகல் - 4 பேர், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ருமென்டேஷன் - 2 பேர், சிவில் - 1
பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு, கிராஜுவேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர்
மனிதவளம் - 7 பேர், சி அன்ட் எம்.எம் - 3 பேர், நிதி மற்றும் கணக்கியல் - 2 பேர், ஹெல்த் பிசிக்ஸ் யூனிட் - 2 பேர், கெமிக்கல் லேப் - 2 பேர்.
இப்பயிற்சிகள் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ளன. விண்ணப்பிக்க இறுதி நாள் - ஏப்., 30ம் தேதி. மேலும் விபரங்களை, www.npcil.co.in என்ற இணையதளத்தில் அறியலாம்.