/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமனம்
/
குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமனம்
ADDED : அக் 22, 2024 07:39 AM
செம்மஞ்சேரி, : தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள, கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய காவல் நிலைய எல்லைகளில், ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இங்கு, வழிப்பறி, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் அதிகமாக பதிவாகின்றன. ரவுடிகள் நடமாட்டம், குடும்ப பிரச்னை புகார்களும் அதிகம் வரும்.
ஆனால், இந்த மூன்று காவல் நிலையங்களிலும், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் பணியிடம் ஆறு மாதங்களாக காலியாக இருந்தது. இதனால், சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு பணியையும் சேர்த்து பார்த்தனர். முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க, ஆய்வாளரே வெளி மாவட்டம், மாநிலங்கள் செல்ல வேண்டும்.
அதுபோன்ற நேரத்தில், இரண்டு பேரில் ஒருவர் காவல் நிலையத்தில் இருப்பர். ஒருவர் மட்டும் இருந்ததால், குற்ற வழக்குகளில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மூன்று காவல் நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் காவல் நிலையங்களில், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். கண்ணகி நகரில், விரைவில் ஆய்வாளர் நியமிக்கப்படுவர் என, அதிகாரிகள் கூறினர்.