/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனர்கள் நியமனம்
/
மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனர்கள் நியமனம்
மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனர்கள் நியமனம்
மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி கமிஷனர்கள் நியமனம்
ADDED : பிப் 26, 2025 06:50 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் உள்ளிட்ட புதிய நகராட்சிகளுக்கு, கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பேரூராட்சிப் பகுதிகள், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.
இரண்டாம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நகராட்சிகளுக்கும் கமிஷனர், மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட தலா 31 பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதா ஸ்ரீயை, மாமல்லபுரம் நகராட்சிக்கும், வேலுார் மாவட்டம், சோளிங்கர் நகராட்சி கமிஷனர் ஹேமலதாவை ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கமிஷனர் மதன்ராஜை, அதே மாவட்டம் திருவையாறு நகராட்சிக்கும் நியமித்து, நகராட்சி நிர்வாக கமிஷனர் சிவராசு உத்தரவிட்டு உள்ளார்.