ADDED : செப் 11, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
கல்பாக்கம்: கல்பாக்கத்தில் உள்ள ‘பாவினி’ அணுசக்தி நிறுவனத்தில், தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கத்தில், பொதுத்துறை நிறுவனமாக ‘பாவினி’ எனப்படும் பாரதிய நபிக்ய வித்யூத் நிகாம் என்ற அணுசக்தி நிறுவனம் இயங்கி வருகிறது. அதன் சார்பில், ‘பி.எப்.பி.ஆர்.,’ எனப்படும் முன்மாதிரி வேக ஈனுலையில், மின் உற்பத்திக்கு தயாராகி வருகிறது.
இந்நிறுவனம், ஆண்டுதோறும் ‘டிரேட் அப்ரெண்டீஸ்’ எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சியை, வெவ்வேறு தொழில் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது. இந்தாண்டு 50 பேருக்கு பயிற்சியளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, தகுதி வாய்ந்தோர், https://bhavini.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
