/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி தாலுகா நீதிமன்றம் டிசம்பருக்குள் திறக்க ஏற்பாடு
/
கூடுவாஞ்சேரி தாலுகா நீதிமன்றம் டிசம்பருக்குள் திறக்க ஏற்பாடு
கூடுவாஞ்சேரி தாலுகா நீதிமன்றம் டிசம்பருக்குள் திறக்க ஏற்பாடு
கூடுவாஞ்சேரி தாலுகா நீதிமன்றம் டிசம்பருக்குள் திறக்க ஏற்பாடு
ADDED : செப் 29, 2025 11:53 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், புதிதாக அமையும் தாலுகா நீதிமன்றத்தை, டிசம்பருக்குள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா எல்லையின் கீழ், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியும் இடம்பெற்றுள்ளன.
வண்டலுார் தாலுகா எல்லைக்கு உட்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை, தற்போது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள தாலுகா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் போலீசாருக்கும், மக்களுக்கும் அலைச்சல் ஏற்படுவதுடன், கால விரயமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, வண்டலுார் தாலுகாவில் உள்ள ஓட்டேரி, கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை விசாரிக்க, கூடுவாஞ்சேரியில் புது நீதிமன்றம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள சமூகநலக்கூடத்தில் தாலுகா நீதிமன்றம் அமைக்க, கடந்தாண்டு பணிகள் துவங்கின.
சமீபத்தில், புது நீதிமன்றம் அமைய உள்ள இந்த இடத்தை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் பார்வையிட்டார்.
இந்நிலையில், வரும் டிசம்பருக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, நீதிமன்றத்தை பயன்பாட்டிற்கு திறக்க, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.