/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுச்சேரியில் இருந்து ரூ.80,000 மதுபாட்டில் கடத்தியோர் கைது
/
புதுச்சேரியில் இருந்து ரூ.80,000 மதுபாட்டில் கடத்தியோர் கைது
புதுச்சேரியில் இருந்து ரூ.80,000 மதுபாட்டில் கடத்தியோர் கைது
புதுச்சேரியில் இருந்து ரூ.80,000 மதுபாட்டில் கடத்தியோர் கைது
ADDED : மே 23, 2025 02:46 AM

அச்சிறுபாக்கம்:விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு, புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, காரில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக, நேற்று தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே, ஆத்துார் சுங்கச்சாவடியில், விழுப்புரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு ஆய்வாளர் மங்களப்பிரியா தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த, 'ஸ்கோடா' காரை, சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 36 பெட்டிகளில், 80,000 ரூபாய் மதிப்புள்ள, 864 பீர் பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
கார் மற்றும் பீர் பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது பாட்டில்களை கடத்திய, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன், 45, பாலாஜி, 34, ஆகிய இருவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.