/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தறிகெட்டு வந்த கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி
/
தறிகெட்டு வந்த கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி
ADDED : ஜூன் 11, 2025 02:19 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வடக்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 31. அச்சிறுபாக்கம் பகுதியில், ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று, அச்சிறுபாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.
அப்போது, சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற, 'மாருதி பலேனோ' கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆட்டோவில் இருந்த பாண்டியன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், பாண்டியன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, தலைமறைவான கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.