ADDED : செப் 07, 2026 11:34 PM
செய்யூர், செப். 8-–
அம்மனுாரில் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் லோடு ஆட்டோ மோதி, மின்கம்பம் சேதமடைந்தது.
அம்மனுார் பகுதியில் இருந்து செய்யூர்– பவுஞ்சூர் இடையே நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அம்மனுார், கீழச்சேரி, செங்காட்டூர், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அம்மனுார் பகுதியில் கடந்த வாரம் செய்யூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த உயர் அழுத்த மின்கம்பம் மோதியது. இதில், மின்கம்பம் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்தும் மின்வாரி துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, தேமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
