ADDED : ஜன 26, 2026 04:45 AM

அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்போடுவது குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சினேகா, நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து வாக்காளர்களுக்கு, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் சினேகா, நேற்று துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட மேலாளர் வேல்முருகன், தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
