/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 14, 2024 11:16 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் அருகில், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, சாலைகளில் விபத்து இல்லாமல் வாகனம் இயக்குவது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், கூடுவாஞ்சேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் தலைமையில், சிறப்பு போக்குவரத்து எஸ்.ஐ., குமார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் தலைமையில், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டிரைவர்களுக்கு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, துண்டு பிரசுரம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நேற்று காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் மற்றும் சோகோ நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

