/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பச்சிளம் குழந்தை சடலம் குப்பை தொட்டியில் மீட்பு
/
பச்சிளம் குழந்தை சடலம் குப்பை தொட்டியில் மீட்பு
ADDED : டிச 21, 2024 11:47 PM
சென்னைகுப்பை தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த குழந்தை சடலம் ஆதம்பாக்கத்தில் மீட்கப்பட்டது.
சென்னை, ஆதம்பாக்கம், கக்கன் நகர் பாலம் அருகில், சாஸ்திரி நகர், 2வது தெருவில், துாய்மை பணியாளர் சரத்குமார் என்பவர், குப்பை தொட்டியில் இருந்து குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம், அழுகிய நிலையில், புழுக்கள் நிறைந்து கிடந்தது.
இது குறித்து துாய்மை பணியாளர் தெரிவித்த தகவலை அடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மற்றும் ஆதம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர்.
குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிந்து, குழந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற நபர் குறித்து, அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வாயிலாக தேடி வருகின்றனர்.