/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் மீண்டும் பேனர் அ.தி.மு.க.,வினர் புது 'ஐடியா'
/
கூடுவாஞ்சேரியில் மீண்டும் பேனர் அ.தி.மு.க.,வினர் புது 'ஐடியா'
கூடுவாஞ்சேரியில் மீண்டும் பேனர் அ.தி.மு.க.,வினர் புது 'ஐடியா'
கூடுவாஞ்சேரியில் மீண்டும் பேனர் அ.தி.மு.க.,வினர் புது 'ஐடியா'
ADDED : மே 30, 2025 01:30 AM

கூடுவாஞ்சேரி:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்., 24 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில், சம்பந்தப்பட்ட கட்சியினர் விழா கொண்டாடினர்.
அதற்காக, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரால், 200க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள், நடைபாதை மற்றும் அணுகுசாலைகளில் வைக்கப்பட்டன.
வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறாக இந்த பேனர்கள் இருந்தால், நம் நாளிதழ் செய்தியின்படி பேனர்கள் அகற்றப்பட்டன.
பின், கடந்த 12ம் தேதி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு சாலை ஓரங்களில், அ.தி.மு.க.,வினரால் வைக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பேனர்கள் போலீசாரால் அகற்றப்பட்டன.
இந்நிலையில், தேதி எதுவும் குறிப்பிடாமல், கூடுவாஞ்சேரி அ.தி.மு.க., சார்பில், நடைமேடையை ஆக்கிரமித்து பேனர் வைக்கப்பட்டது.
அதை சுட்டிக்காட்டி, கடந்த 26ம் தேதி நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, அந்த பேனரை அகற்றாமல், அதே நடைமேடையில், அப்படியே உட்பக்கமாக திருப்பி வைத்து, மீண்டும் அ.தி.மு.க.,வினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த பேனரை அப்புறப்படுத்தி, நடைமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.