/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ரவுண்டானா பகுதியில் விதியை மீறி மீண்டும் பேனர்
/
செங்கை ரவுண்டானா பகுதியில் விதியை மீறி மீண்டும் பேனர்
செங்கை ரவுண்டானா பகுதியில் விதியை மீறி மீண்டும் பேனர்
செங்கை ரவுண்டானா பகுதியில் விதியை மீறி மீண்டும் பேனர்
ADDED : செப் 09, 2025 12:44 AM

செங்கல்பட்டு,செங்கல்பட்டில், ரவுண்டானா பகுதியில், பேனர் வைக்க நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை மீறி, மீண்டும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலிருந்து, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களில், தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
ரவுண்டானா பகுதியில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்ட பகுதியில், அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர், பேனர்கள் வைத்தனர். இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விளம்பர பேனர்களை பார்க்கும்போது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அனுமதியில்லாத பேனர்களை, நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது.
அங்கு, ரவுண்டானா பகுதியில், விபத்து நடக்கும் பகுதி என்பதால், விளம்பர பேனர்கள் வைக்க கூடாது, மீறி வைத்தால், அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை மீறி, மீண்டும் மீண்டும் அரசியல் கட்சியினர் பேனர் வைப்பதை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
பெரிய விபத்து நடப்பதற்குள், ரவுண்டானா மற்றும் விபத்துகள் நடைபெறும் பகுதியில், விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.