/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்நிலை தொட்டியை சீரமைத்து 4 மாதத்தில் வளரும் ஆலமர கன்று
/
மேல்நிலை தொட்டியை சீரமைத்து 4 மாதத்தில் வளரும் ஆலமர கன்று
மேல்நிலை தொட்டியை சீரமைத்து 4 மாதத்தில் வளரும் ஆலமர கன்று
மேல்நிலை தொட்டியை சீரமைத்து 4 மாதத்தில் வளரும் ஆலமர கன்று
ADDED : அக் 23, 2024 01:16 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே நீர்பெயர் ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக அப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேல்நிலைத் தேக்கத் தொட்டி பழுதடைந்து இருந்ததால், நான்கு மாதங்களுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 20,000 ரூபாய் மதிப்பீட்டில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
முறையாக சீரமைப்பு பணி செய்யப்படாததால், நான்கே மாதங்களில் மேல்நிலைத் தேக்கத் தொட்டியில், தற்போது ஆலமர கன்று வளர துவங்கியுள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.