அடிப்படைத் தேவைகளை செய்து- தருவேன்: கணிதா சம்பத் உறுதி
அடிப்படைத் தேவைகளை செய்து- தருவேன்: கணிதா சம்பத் உறுதி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:22 PM
மதுராந்தகம்: ‘‘துராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அனை த்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்,’’ என அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் பேசினார்.
மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் ஒன்றியத்தில், சிலாவட்டம், அய்யனார் கோவில் சந்திப்பு, சிறுநாகலுார் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் திறந்த வாகனத்தில் சென்று நேற்று மாலையுடன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் பேசியதாவது:
மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல், திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. இந்த தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதுடன், அரசு அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு, மக்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம், நகர தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
