தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடிப்படை வசதிகளை செய்து தருவேன் அ.தி.மு.க., வேட்பாளரர் கணிதா சம்பத்

அடிப்படை வசதிகளை செய்து தருவேன் அ.தி.மு.க., வேட்பாளரர் கணிதா சம்பத்

அடிப்படை வசதிகளை செய்து தருவேன் அ.தி.மு.க., வேட்பாளரர் கணிதா சம்பத்


ADDED : செப் 28, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுராந்தகம், செப். 29-–-

‘‘மதுராந்தகம் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பேன் என,’’ அ.தி.மு.க., வேட்பாளரர் கணிதா சம்பத் பேசினார்.

மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கீழகாண்டை, ஜமீன் எண்டத்துார், ஒழவெட்டி, சித்தாமூர், நெட்ராம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முனுசாமி வழிகாட்டுதலின்படி, அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் நேற்று, தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பூ மாலை, அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் பேசியதாவது:

மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மேல்நிலை நீர் தொட்டி, கலையரங்கம் மற்றும் குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பேன்.

2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில் 30 படுக்கை வசதியுடன், மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேலும், தாசில்தார் அலுவலகம், மதுராந்தகம் நீதிமன்றம், கத்திரிச்சேரி கிளியாற்று பாலம் கட்டப்பட்டது. கிராமங்களில் சாலை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட மக்கள் நல பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன் .

தொகுதியின் வளர்ச்சிக்காக மக்கள் இரட்டை இலையை தேர்வு செய்வார்கள், என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம், தெற்கு ஒன்றிய செயலர் கார்த்திகேயன், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா மற்றும் கூட்டணி கட்சியின், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us