/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
/
துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
ADDED : ஆக 03, 2025 10:53 PM
மறைமலை நகர்:திம்மாவரத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
திம்மாவரத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. செங்கல்பட்டு நகரை ஒட்டிய ஊராட்சி என்பதால் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது.
இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஊராட்சி ஒன்றியம் சார்பில் 15வது நிதிக்குழு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். காட்டாங்கொளத்துார் ஒன்றிய தலைவர் உதயா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.