/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்
/
பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்
பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்
பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் மாமல்லையில் இன்று துவக்கம்
ADDED : அக் 21, 2025 11:28 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம், இன்று துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில் உள்ள நந்தவனத்தில், குருக்கத்தி மலரில் ஐப்பசி மாத அவிட்டம் நட்சத்திர நாளில் அவதரித்தவர் பூதத்தாழ்வார். ஸ்தலசயன பெருமாளை, அன்பே தகழியாய் என போற்றிப் பாடியுள்ளார்.
கோவிலில் தனி சன்னிதியில் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அவருக்கு, ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி உத்சவம், 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த உத்சவம், இன்று துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
இதை முன்னிட்டு, இன்று முதல், 30ம் தேதி வரை, தினசரி, பிற்பகல் 2:00 மணிக்கு திருமஞ்சனத்துடன் வழிபட்டு, நாலாயிர பிரபந்தம், திருப்பாவை சாற்றுமறை சேவையாற்றுகின்றனர்.
பூதத்தாழ்வார், தினசரி மாலை 5:00 மணிக்கு, மாடவீதிகளில் உலா சென்று, மீண்டும் கோவிலை அடைந்து, இரவு 7:30 மணிக்கு திருவாய்மொழி சேவையாற்றுகின்றனர்.
அக்., 30ம் தேதி, காலை 5:30 - 6:30 மணிக்குள், திருத்தேரில் ஆழ்வார் எழுந்தருளி, 8:00 மணிக்கு வடம் பிடித்து உலா புறப்பாடு நடைபெறும்.
ஜெயந்தி நாளான 31ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம், 8:30 மணிக்கு ரத்னாங்கி சேவை, 11:00 மணிக்கு, தொல்லியல் வளாக ஞானபிரான் கோவிலில் மங்களாசாசனம், பின் வீதியுலா; மாலை 4:00 மணிக்கு, அவதார வளாக நந்தவன மண்டபத்தில் திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை; இரவு 8:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாளுடன் வீதியுலா நடைபெறும்.
நவ., 1ம் தேதி, விடையாற்றி உத்சவம் நடக்கிறது.