/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் பணிமனை கூரையில் ஏறி பீஹார் வாலிபர் தற்கொலை மிரட்டல்
/
பஸ் பணிமனை கூரையில் ஏறி பீஹார் வாலிபர் தற்கொலை மிரட்டல்
பஸ் பணிமனை கூரையில் ஏறி பீஹார் வாலிபர் தற்கொலை மிரட்டல்
பஸ் பணிமனை கூரையில் ஏறி பீஹார் வாலிபர் தற்கொலை மிரட்டல்
ADDED : மே 23, 2025 02:32 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே, விழுப்புரம் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம், இந்த பணிமனை அலுவலக கட்டடத்தின் கூரை மீது ஏறிய மர்ம நபர், அங்கிருந்து குதிக்கப் போவதாகக் கூறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைக் கண்ட அரசு பணிமனை ஊழியர்கள், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தின் கூரை மீது ஏறி, அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் அவரிடம் விசாரித்ததில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் என தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுஜித்தை, செங்கல்பட்டு நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.