/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் குறுக்கிட்டு விபத்து பைக்கில் சென்றவர் பலி
/
நாய் குறுக்கிட்டு விபத்து பைக்கில் சென்றவர் பலி
ADDED : அக் 27, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் சென்றவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, சாணாபுத்துார் கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர், 42. கடந்த 6ம் தேதி, அருகில் உள்ள அல்லிப்பூக்குளம்மேடு வழியாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். குறுக்கே நாய் வந்ததால், தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

