/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பா.ஜ., நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு
/
பா.ஜ., நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு
ADDED : டிச 05, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம், ஹயக்ரீவர் நகரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரது மனைவி மகேஷ்வரி, 45; பா.ஜ., மாநில மகளிரணி செயலர். இவர், கூடுவாஞ்சேரி மற்றும் மகேந்திரா சிட்டியில், மகளிர் விடுதி நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் தன் 'மாருதி ஆம்னி' காரை, வீட்டின் முன்பக்கம் நிறுத்தி இருந்தார்.
நேற்று காலை பார்த்த போது, காரின் இருபக்கக் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.