/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் பா.ஜ., தேசியக்கொடி பேரணி
/
சித்தாமூரில் பா.ஜ., தேசியக்கொடி பேரணி
ADDED : மே 24, 2025 02:21 AM

சித்தாமூர்:ஆப்ரேஷன் சிந்துாரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, சித்தாமூரில் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி, நடந்தது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணியர் 26 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தது. அதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், செய்யூர் தொகுதி பா.ஜ., சார்பில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன்குமார் தலைமையில், சித்தாமூரில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.
இந்த பேரணி சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று சித்தாமூர் சாலை சந்திப்பில் முடிந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தேசிய கொடி ஏந்தி பேரணியாக சென்றனர்.