/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டலத்தில் துாய்மையான குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

ADDED : ஆக 29, 2025 11:57 PM
மதுராந்தகம்தண்டலம் கிராமத்தில் மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், துாய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என, கிராம மக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதால், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது.
மாசடைந்த குடிநீரை குடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள மாசடைந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் உயிரிழக்கிறது.
இதனால் பாலாற்றில் இருந்து குடிநீர் வழங்க கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த கிராம மக்கள் , மாசடைந்த தண்ணீருடன், 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி துாய்மையான குடிநீர் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
---------------