/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி கல்லுாரியில் புத்தக வெளியீட்டு விழா
/
ஆதிபராசக்தி கல்லுாரியில் புத்தக வெளியீட்டு விழா
ADDED : ஆக 12, 2025 10:54 PM

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரியில், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆனந்தகுமார் எழுதிய,'ஜஸ்ட் பீல்' புத்தகம் வெளியிடப்பட்டது.
சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆனந்தகுமார் எழுதிய,'ஜஸ்ட் பீல்' புத்தக வெளியீட்டு விழா, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழாவில், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ பெற்றுக்கொண்டார்.
அதன் பின், நுாலாசிரியர் ஆனந்தகுமார், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன மாநில வள பயிற்றுநர் அரவிந்தன் உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில், ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி முதல்வர் கண்ணன், லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.