ADDED : மார் 18, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: திருப்போரூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர், அருகில் உள்ள நர்சிங் பயிற்சி நிறுவனத்தில் நர்சிங் பயின்று வருகிறார்.
கடந்த 4ம் தேதி பயிற்சி நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் எண்ணிற்கு, பெற்றோர் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' என வந்தது.
சிறுமியின் தாய் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியின் மொபைல் போன் சிக்னலை வைத்து தேடி வந்த நிலையில், கடலுார் மாவட்டம், வடலுார் பகுதியை சேர்ந்த சிறுவர் ஒருவருடன் தங்கி இருந்தது தெரியவந்தது.
'இன்ஸ்டாகிராம்' வாயிலாக அறிமுகமாகி, பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததும், அப்போது, அந்த சிறுவன் சிறுமியிடம் அத்துமீறியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
